search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பியன் கோல்டு ஷூவை 4-வது முறையாக கைப்பற்றினார் மெஸ்சி
    X

    ஐரோப்பியன் கோல்டு ஷூவை 4-வது முறையாக கைப்பற்றினார் மெஸ்சி

    ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளில் விளையாடிய வீரர்களில் அதிக கோல்கள் அடித்து மெஸ்சி 4-வது முறையாக கோல்டன் ஷூவை பெற்றுள்ளார்.
    ஐரோப்பிய நாடுகளில் அந்தந்த நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கிளப்புகளுக்கு இடையே ‘லா லிகா’ தொடர் நடைபெறுகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கிளப்புகளுக்கிடையே ‘லீக் 1’ நடைபெறுகிறது. இதேபோன்று இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் தொடர் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரருக்கு ‘ஐரோப்பியன் கோல்டன் ஷூ’ வழங்கப்படும். அதன்படி ‘லா லிகா’வில் மெஸ்சி 37 கோல்கள் அடித்துள்ளார். இதன்மூலம் 74 புள்ளிகள் பெற்று கோல்டன் ஷூவை 4-வது முறையாக பெற்றுள்ளார். இதற்கு முன் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை இந்த ஷூவை பெற்றிருந்தார். மெஸ்சி தற்போது ரொனால்டோ சாதனையை சமன் செய்துள்ளார்.



    போர்ச்சுக்கல் கிளப் அணியான ஸ்போர்ட்டிங் லிஸ்பனில் விளையாடும் பாஸ் டோஸ்ட் 68 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 50 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×