search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    9 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு?: சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ
    X

    9 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு?: சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ

    ரியல் மாட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 9 மில்லியன் டாலர் அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    போர்ச்சுக்கல் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியில் வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார். மேலும், விளம்பரங்கள் மூலம் பலகோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார்.

    இதுபோன்று சம்பாதித்த வருமானத்திற்கு உரிய வகையில் வரி கட்டவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. சமீபத்தில் இதே விவகாரத்தில் மெஸ்சியின் தண்டனையை குறைக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

    இதனால் ரொனால்டோ விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் வரித்துறை அதிகாரிகள் சுமார் 8.95 மில்லியன் டாலர் அளவிற்கு ரொனால்டோ மோசடி செய்துள்ளதாக கருதுகின்றனர்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ 2011-ல் இருந்து 2013-வரை தனது படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்துவதற்கான உரிமை குறித்து சரியான தகவலை தெரிவிக்கவில்லை என்று ஸ்பெயின் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அதனடிப்படையில் இந்த விவகாரம் வெளி வந்துள்ளது.

    ஒருவேளை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி, ரொனால்டோ மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடத்திற்கு நான்கு மாதம் என 12 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
    Next Story
    ×