search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டனுக்கு தயார்: கத்திக்குத்து காயத்தில் இருந்து மீண்ட குவிடோவா சொல்கிறார்
    X

    விம்பிள்டனுக்கு தயார்: கத்திக்குத்து காயத்தில் இருந்து மீண்ட குவிடோவா சொல்கிறார்

    வீட்டில் திருட வந்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் காயம் அடைந்த செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு திரும்புகிறார்.
    செக் குடியரசு நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை பெட்ரா குவிட்டோவா. 2011-ம் ஆண்டு மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி காலையில் குவிட்டோவின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம மனிதன் கத்தியால் குவிட்டோவின் கழுத்தை அறுக்க முயன்றான். ஆனால் குவிட்டோவா திறமையாக அவனை சமாளித்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.

    ஆனால், இடது கையில் நான்கு விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்காக அவரது கையில் சுமார் நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 6 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினார்கள்.

    டாக்டர்கள் கூறிய காலத்திற்குள்ளாகவே குவிட்டோவா விரல்களில் ஏற்பட்ட காயம் குணமடைந்துவிட்டன. இதனால் டென்னிஸ் களத்திற்கு திரும்ப ஆசைப்படுகிறார். வருகிற 28-ந்தேதி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதில் குவிட்டோவா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ஆனால், இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் குவிட்டோவா கலந்து கொள்வார் என்று அவரது பப்ளிசிட்டி மானேஜர் தெரிவித்துள்ளார். மேலும், ‘‘பிரெஞ்ச் ஓபன் குறித்து கடைசி நிமிடத்தில் தனது முடிவை எடுப்பார்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×