search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றிக்கோப்பையுடன் ஹாமில்டன்.
    X
    வெற்றிக்கோப்பையுடன் ஹாமில்டன்.

    ஸ்பெயின் பார்முலா-1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி

    பார்சிலோனாவில் நேற்று நடந்த 5-வது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.
    பார்சிலோனா :

    இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 5-வது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டி பார்சிலோனாவில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 307.104 கிலோ மீட்டராகும்.

    வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 35 நிமிடம் 56.497 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.



    ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ அணி) 3.490 வினாடி பின்தங்கி 2-வது இடம் பெற்றார். ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிச்சார்டே (ரெட்புல்) 3-வது இடம் பிடித்தார். போர்ஸ் இந்தியா அணிக்காக கார் ஓட்டும் செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) முறையே 4-வது, 5-வது இடம் பெற்றனர்.

    5-வது சுற்று முடிவில் செபாஸ்டியன் வெட்டல் 104 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 98 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 63 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 6-வது சுற்று போட்டி மொனாக்கோவில் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.

    Next Story
    ×