search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வு முடிவில் மாற்றமா?: பாகிஸ்தான் அணியின் மூத்த பேட்ஸ்மேன் யூனிஸ்கான் பேட்டி
    X

    ஓய்வு முடிவில் மாற்றமா?: பாகிஸ்தான் அணியின் மூத்த பேட்ஸ்மேன் யூனிஸ்கான் பேட்டி

    வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு இன்னிங்சிலும் சதம் அடித்தாலும் கூட எனது ஓய்வு முடிவை மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேன் யூனிஸ்கான் பேட்டியளித்துள்ளார்.
    கிங்ஸ்டன் :

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேன் 39 வயதான யூனிஸ்கான் அளித்த பேட்டியில், ‘வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தேன். இந்த நிலையில் எனது முடிவை நான் திரும்ப பெற இருப்பதாக வியூகங்கள் கிளம்பி உள்ளன.

    அதில் உண்மை இல்லை. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு இன்னிங்சிலும் சதம் அடித்தாலும் கூட எனது ஓய்வு முடிவை மாற்றிக்கொள்ளமாட்டேன். இந்த தொடருடன் ஓய்வு பெறுவது உறுதி. எனக்காகவும், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்று பாகிஸ்தானுக்காகவும் பிரார்த்தனை செய்யும்படி ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
    Next Story
    ×