search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்: விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சாதனை
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்: விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் சாதனை

    குஜராத் லயன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், பஞ்சாப் வீரர் மனன்வோராவின் கேட்ச்சை பிடித்த போது, ஐ.பி.எல்.-ல் விக்கெட் கீப்பராக அவர் வெளியேற்றிய 100-வது அவுட்டாக அமைந்தது.
    8 அணிகள் இடையிலான 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

    இந்த நிலையில் ராஜ்கோட்டில் நேற்று மாலை நடந்த தொடரின் 26-வது லீக்கில் குஜராத் லயன்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி குஜராத்தை தோற்கடித்து 3-வது வெற்றியை ருசித்தது.



    குஜராத் லயன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், பஞ்சாப் வீரர் மனன்வோராவின் கேட்ச்சை பிடித்த போது, ஐ.பி.எல்.-ல் விக்கெட் கீப்பராக அவர் வெளியேற்றிய 100-வது அவுட்டாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆவார். இதுவரை 5 அணிகளுக்காக விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 145 ஆட்டங்களில் 74 கேட்ச், 26 ஸ்டம்பிங் செய்துள்ளார். அதிகம் பேரை ஆட்டம் இழக்கச்செய்த விக்கெட் கீப்பர்களின் வரிசையில் 2-வது இடத்தில் டோனி (94 அவுட்) இருக்கிறார்.
    Next Story
    ×