search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குறைந்த ஸ்கோர் - ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்த வீரர்கள்: சோகத்தில் பெங்களூர் அணி
    X

    குறைந்த ஸ்கோர் - ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்த வீரர்கள்: சோகத்தில் பெங்களூர் அணி

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர்.
    கொல்கத்தா:

    ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

    இந்தப் போட்டி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மிகவும் மோசமான போட்டிகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன மும்மூர்த்திகளாக கெயில், டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோரை வைத்திருந்த பெங்களூர் அணி இப்படி ஒரு மோசமான ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

    ஐ.பி.எல் தொடரில் 2009-ம் இதே பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பதிவு செய்த 58 ரன்களே குறைவான ஸ்கோராக இருந்தது. தற்போது பெங்களூர் அணி எடுத்துள்ள 49 ரன்கள் ஐ.பி.எல். தொடரில் குறைவான ஸ்கோராக பதிவாகியுள்ளது.

    ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முந்தையை குறைவான ஸ்கோர் 70 ரன்கள் ஆகும். 2014-ம் ஆண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த ஸ்கோரை பதிவு செய்து இருந்தது.

    இந்தப் போட்டியில் மற்றொரு சோதனை என்னவென்றால் பெங்களூர் அணியில் ஒருவர் கூட இரட்டை இலக்கில் ரன்களை எடுக்கவில்லை. ஆட்டமிழந்த 10 வீரர்கள் உட்பட அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே ரன்களை எடுத்தனர்.

    கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து டக் அவுட் ஆனார். அப்போது முதல் ஆட்டம் முடியும் வரை அவர் டென்ஷனாகவே இருந்தார்.

    ஐ.பி.எல். தொடரில் இந்தப் போட்டியை விராட் கோலி ஒரு போதும் மறக்கவே மாட்டார் என்றே தெரிகிறது.
    Next Story
    ×