search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    49 ரன்களுக்குள் சுருண்டு கொல்கத்தா அணியிடம் பரிதாபமாக தோற்றது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
    X

    49 ரன்களுக்குள் சுருண்டு கொல்கத்தா அணியிடம் பரிதாபமாக தோற்றது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

    ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    கொல்கத்தா:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்களுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வெற்றி பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    132 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களூர் அணியின் கெயில் மற்றும் கேப்டன் விராட் கோலி களம் இறங்கினர். 132 ரன்கள் என்பதால் பெங்களூர் அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    கேப்டன் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அவரை தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்திற்குள் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தன.

    கெயில்(7), மந்தீப் சிங்(1), டி வில்லியர்ஸ்(8), ஜாதவ்(9), பின்னி(8) என்ற அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. இறுதியாக பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் கொல்கத்தா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில்  அபார வெற்றி பெற்றது.

    அபாரமாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கவுண்ட்டர் நைல் ஆட்டநாயகன் விருது பெற்றார். வோக்ஸ் மற்றும் கிராந்தோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
    Next Story
    ×