search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோன்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்: போபண்ணா ஜோடி சாம்பியன்
    X

    மோன்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ்: போபண்ணா ஜோடி சாம்பியன்

    மொனாகோ நாட்டில் நடைபெற்ற மோன்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
    மொனாகோ நாட்டில் மோன்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - உருகுவேயின் பாப்லோ உடன் இணைந்து ஸ்பெயின் நாட்டின் பெலிசியானோ லோபஸ் - மார்க் லோபஸ் ஜோடியை எதிர்கொண்டது.

    சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 2-1 என போபண்ணா ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. முதல் செட்டை போபண்ணா ஜோடி 6-3 என எளிதில் கைப்பற்றியது. ஆனால், 2-வது செட்டில் ஸ்பெயின் ஜோடி அபாரமாக விளையாடியது. இதனால் அந்த செட்டை ஸ்பெயின் ஜோடி 6-3 எனக்கைப்பற்றியது.

    வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் இரு ஜோடியும் அபாரமாக விளையாடியது. இறுதியில் 10-4 என போபண்ணா ஜோடி கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனில் பப்லோவுடன் இணைந்து போபண்ணா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். ஒட்டுமொத்தமாக 3-வது முறையாக போபண்ணா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜீவன் நெடுன்செசியன் உடன் இணைந்து போபண்ணா சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×