search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்தை சமாளிக்குமா புனே?
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்தை சமாளிக்குமா புனே?

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணியுடன் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மோதுகின்றன.
    5 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி, 3-ல் தோல்வி கண்டுள்ள புனே சூப்பர் ஜெயன்ட் அணி உள்ளூரில் நடக்கும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளிபட்டியலில் கணிசமான முன்னேற்றம் காணலாம். விக்கெட் கீப்பர் டோனியின் அவுட்-ஆப் பார்ம் (12, 5, 11, 5, 28 ரன்) அந்த அணிக்கு கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.

    ஆனாலும் அவர் பழைய நிலைக்கு திரும்பி, ரன் குவிப்பார் என்று அணி நிர்வாகம் ஆணித்தரமாக நம்புகிறது. 6 நாட்கள் ஓய்வு கிடைத்ததால் கேப்டன் ஸ்டீவன் சுமித் தனது மனைவி, குழந்தையுடன் இரு நாட்கள் துபாயில் தங்கிவிட்டு புத்துணர்ச்சியுடன் திரும்பியிருக்கிறார். புனே அணியை பொறுத்தவரை அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்தினால் இதுவும் அபாயகரமான அணியே என்பதில் சந்தேகமில்லை.



    அவர்கள் எதிர்கொள்ள இருக்கும் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்குகிறது. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (239 ரன்), ஷிகர் தவான் (205 ரன்) இருவரும் 200 ரன்களுக்கு மேல் குவித்து விட்டனர். பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார் (15 விக்கெட்), ரஷித்கான் (9 விக்கெட்) உள்ளிட்டோர் கடும் நெருக்கடி கொடுக்கிறார்கள்.

    ஆனாலும் ஐதராபாத் அணிக்கு இன்னொரு சவால் காத்திருக்கிறது. இதுவரை பெற்றுள்ள 4 வெற்றிகளும் உள்ளூரில் (ஐதராபாத்) கிடைத்தவை. வெளியூரில் நடந்த ஆட்டங்களில் (மும்பை, கொல்கத்தாவுக்கு எதிராக) தோல்வியையே சந்தித்து இருக்கிறது. எனவே வெளியூரில் முதல் வெற்றியை காணும் முனைப்புடன் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.
    Next Story
    ×