search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஹர்பிரீத் சிங்: சர்பராஸ் கானுக்கு மாற்று வீரராக தேர்வு
    X

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஹர்பிரீத் சிங்: சர்பராஸ் கானுக்கு மாற்று வீரராக தேர்வு

    சர்பராஸ் கான் காயம் அடைந்துள்ளதால் அவருக்குப் பதிலாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்பிரீத் சிங்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தேர்வு செய்துள்ளது.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பிடித்திருந்தவர் சர்பராஸ் கான். ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன் நடைபெற்ற பயிற்சியின்போது இளம் வயதான இவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்த தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்குப் பதிலாக ஹர்பிரீத் சிங் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    2010 ஐ.பி.எல். ஏலத்தில் ஹர்பிரீத் சிங்கின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஏலம் நடைபெற்ற நாளில் மும்பை பொலீசாரால் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி வந்தது. இதனால் ஹர்பிரீத் சிங்கை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. பின்னர்தான் அது ஹர்பிரீத் சிங் இல்லை. ஹர்மீத் சிங் என்பது தெரியவந்தது.

    இதனால் ஐ.பி.எல். வாய்ப்பை இழந்த அவர், தற்போது ஐ.பி.எல். தொடரில் இடம்பிடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
    Next Story
    ×