search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எஸ்.ஜி-யை 6-1 என வீழ்த்தியதுபோல் யுவான்டசையும் வீழ்த்துவோம்: நெய்மர் நம்பிக்கை
    X

    பி.எஸ்.ஜி-யை 6-1 என வீழ்த்தியதுபோல் யுவான்டசையும் வீழ்த்துவோம்: நெய்மர் நம்பிக்கை

    பாரிஸ் செயன்ட் ஜெர்மைன் அணிக்கெதிராக அதிசயம் நடக்கும் வகையில் 6-1 என வெற்றி பெற்றதுபோல், யுவான்டஸ் அணிக்கெதிராகவும் நடக்கும் என நெய்மர் தெரிவித்துள்ளார்.
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டி காலிறுதி நிலையை அடைந்துள்ளது.

    காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்றில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா - பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் செயன்ட் ஜெர்மைன் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் தங்களுடைய சொந்த மைதானத்தில் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் போட்டி பாரிஸ் செயன்ட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் பார்சிலோனாவை 4-0 என பாரிஸ் செயன்ட் ஜெர்மைன் அணி துவம்சம் செய்தது.

    பின்னர் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அதிசயம் நடக்கும் வகையில் பார்சிலோனா 6-1 என பாரிஸ் செயன்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    கடந்த வாரம் நடைபெற்ற காலிறுதி முதல் லெக்கில் பார்சிலோனா, இத்தாலி கிளப்பான யுவான்டசை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது. இதில் பார்சிலோனா 0-3 என தோல்வியடைந்தது. 2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் புதன்கிழமை நள்ளிரவு (இந்திய நேரப்படி) நடக்கிறது. இதில் பார்சிலோனா 4-0 என அல்லது இரண்டிலும் சேர்த்து யுவான்டசை விட ஒரு கோல் அதிகம் பெற வேண்டும். அப்படி என்றால்தான் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.

    பாரி்ஸ் செயன்ட் ஜெர்மைன் அணிக்கெதிராக எப்படி அதிசயம் நடக்கும் வகையில் சிறப்பாக விளையாடினோமோ, அதேபோல் யுவான்டஸ் அணிக்கெதிராகவும் நடக்கும் என பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நெய்மர் கூறுகையில் ‘‘எங்களால் வெற்றி பெற முடியும் என்று நாங்கள் நம்ப வேண்டும். நாங்கள் ஒருமுறை ஜெயித்து காட்டியுள்ளோம். மற்றொரு முறையும் எங்களால் செய்ய முடியும். எங்களால் முடிந்த அளவிற்கு திறமையை வெளிப்படுத்துவோம். எல்லாம் சிறப்பாக நடந்தால், மீண்டும் ஒருமுறை நல்ல நிலைமைக்கு திரும்புவோம். எங்களுடைய வலிமை மற்றும் அணியை நான் நம்புகிறேன். எல்லாவற்றையும் இழந்து விட்டோம். ஆகவே, இழப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லாமே அணி வெற்றி பெறுவதற்குதான்’’ என்றார்.
    Next Story
    ×