search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடந்த ஐ.பி.எல். தொடரில் கலக்கிய முஷ்டாபிஜூர் ரஹ்மான் இந்த ஆண்டு கலந்து கொள்வாரா?
    X

    கடந்த ஐ.பி.எல். தொடரில் கலக்கிய முஷ்டாபிஜூர் ரஹ்மான் இந்த ஆண்டு கலந்து கொள்வாரா?

    கடந்த ஐ.பி.எல். தொடரில் கலக்கிய வங்காள தேச அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் ஐ.பி.எல். தொடரில் கலந்து கொள்வது சந்தேகம் எனத் தெரிவித்துள்ளார்.
    வங்காள தேசத்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான். 21 வயதாகும் முஷ்டாபிஜூர் ரஹ்மான் தனது இடது கை வேகப்பந்து வீச்சின் மூலம் பிரபலம் அடைந்தார். இதனால் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. கடந்த தொடரில் 16 போட்டிகளில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

    ஐ.பி.எல். தொடருக்குப்பின் முஷ்டாபிஜூர் ரஹ்மான் தோள்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டார். இதனால் லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் சுமார் 6 மாத காலம் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார்.

    தற்போது இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடி வரும் முஷ்டாபிஜூர் ரஹ்மான், இந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடுவாரா? என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

    இதுகுறித்து முஷ்டாபிஜூர் ரஹ்மான் கூறுகையில் ‘‘ஐ.பி.எல். தொடரில் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆனால், இந்த தொடரில் பங்கேற்பதை பற்றி நான் நினைக்கவில்லை. வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

    ஐ.பி.எல். தொடரில் ஏராளமான போட்டியில் விளையாடுவேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல இயலாது. நான் இந்தியா வந்தாலும், மே முதல் வாரத்தில் வங்காள தேச அணிக்காக திரும்ப வேண்டும். என்னுடைய பழைய பந்து வீச்சை இன்னும் பெறவில்லை. அதனால், வங்காள தேச ஒருநாள் அணியின் கேப்டன் மோர்தசா, ஐ.பி.எல். தொடரை புறக்கணிக்கும்படி கூறியுள்ளார். அவரது ஆலோசனையை நான் முக்கியத்துவம் கொடுத்து பரிசீலனை செய்து வருகிறேன்.



    நான் நீண்ட செஷனை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். இதுதான் எனது உடற்தகுதியை மீண்டும் கொண்டு வருவதற்கு முக்கியமானது. நான் என்னுடைய துல்லியமான பந்து வீச்சை கொண்டு வர அதிக அளவில் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் இதுவரை எனது பந்து வீச்சு திருப்பதியை தரவில்லை’’ என்றார்.

    கடந்த வருடம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 1.4 கோடி ரூபாய் கொடுத்து முஷ்டாபிஜூர் ரஹ்மானை ஏலம் எடுத்தது. இந்த வருடம் அவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
    Next Story
    ×