search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸி. தொடரில் 6 அரை சதங்கள்: 11-வது இடத்திற்கு முன்னேறினார் லோகேஷ் ராகுல்
    X

    ஆஸி. தொடரில் 6 அரை சதங்கள்: 11-வது இடத்திற்கு முன்னேறினார் லோகேஷ் ராகுல்

    ஆஸ்திரேலியா தொடரில் 6 அரை சதங்கள் அடித்ததன் மூலம் 11 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார் லோகேஷ் ராகுல்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய தொடக்க பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் ஆறு அரை சதங்கள் அடித்தார். குறிப்பாக தொடரை நிர்ணயிக்கும் தரம்சாலா டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் விளாசினார்.

    இந்த தொடரில் அவர் 7 இன்னிங்சில் 64, 10, 90, 51, 67, 61 மற்றும் 51 (அவுட் இல்லை) ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் 22-வது இடத்தில் இருந்த லோகேஷ் ராகுல் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



    புஜாரா 4-வது இடத்திலும், விராட் கோலி 5-வது இடத்திலும் உள்ளனர். அதன்பிறகு தரவரிசையில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 11-வது இடத்தில் உள்ளார். ரகானே மூன்று இடங்கள் முன்னேறி 14-வது இடத்திலும், விஜய் நான்கு இடங்கள் இறங்கி 34-வது இடத்திலும் உள்ளனர்.
    Next Story
    ×