search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராட் கோலி மீது ஆஸ்திரேலிய மீடியாக்கள் மீண்டும் பாய்ச்சல்
    X

    வீராட் கோலி மீது ஆஸ்திரேலிய மீடியாக்கள் மீண்டும் பாய்ச்சல்

    இந்திய அணி கேப்டன் வீராட் கோலியை ஏற்கனவே ஆஸ்திரேலிய மீடியாக்கள் வசைப்பாடி இருந்தன. தற்போது அவர் ஆஸ்திரேலிய வீரர்கள் இனி நண்பர்கள் இல்லை என்று கூறியதால் மேலும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.
    சிட்னியில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் என்ற பத்திரிகை “டெஸ்ட் தொடர் முடிந்ததும் கை குலுக்கிய வீராட் கோலி அதில் இருந்து முன்னேறி சென்று இருக்க வேண்டும். ஆனால் அவர் சிறுபிள்ளை தனமாக நடந்து கொண்டுள்ளார்” என்று தெரிவித்து உள்ளது. மேலும் கோலியை ஈகோ பிடித்தவர் என்றும் வர்ணித்துள்ளது.

    “இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் விளையாட்டு உணர்வுடன் செயல்படவில்லை என்பது ஸ்டீவவன் சுமித் மது அருந்தலாம் என்ற கோரிக்கையை இந்தியா நிராகரித்ததன் மூலம் உறுதியாக உள்ளது” என்று தி ஆஸ்திரேலியன் பத்திரிகை குறிப்பிட்டு உள்ளது.

    ஹெரால்டு சன் என்ற பத்திரிகை “கோலி மன்னிப்பு என்ற வார்த்தையை கூற வேண்டும். முரளி விஜய்யை திட்டியதற்காக சுமித் மன்னிப்பு கேட்டுள்ளார்” என்று கூறியுள்ளது.

    Next Story
    ×