search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஜே.பி.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி அணியும், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணியும் மோதிய காட்சி.
    X
    சென்னை ஜே.பி.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி அணியும், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணியும் மோதிய காட்சி.

    கோவையில் பெண்களுக்கான கைப்பந்து போட்டி தொடங்கியது

    சர்வதேச மகளிர் தின தென் மண்டல (தென்னிந்திய) அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
    கோவை :

    கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேலாண்மை பவுண்டேஷன் சார்பில் சர்வதேச மகளிர் தின தென் மண்டல (தென்னிந்திய) அளவிலான பெண்களுக்கான கைப்பந்து போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. போட்டியை வி.ஆர்.ஜி. நிறுவனங்களின் குழும தலைவர் கோவிந்தராஜூ, அழகப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் விவரம் வருமாறு:-



    முதல் போட்டியில் சென்னை ஜே.பி.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி அணியும், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணியும் மோதின. இதில் 25-5, 25-8 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை ஜே.பி.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் மைசூரு ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியும், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில் 25-14, 21-1 என்ற புள்ளிக்கணக்கில் மைசூரு ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.
    Next Story
    ×