search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி கூடைப்பந்து: லயோலா சாம்பியன்
    X

    கல்லூரி கூடைப்பந்து: லயோலா சாம்பியன்

    அமேட்டி குளோபல் பிசினஸ் பள்ளி சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் லயோலா கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    சென்னை:

    அமேட்டி குளோபல் பிசினஸ் பள்ளி சார்பில் கல்லூரிகள் இடையேயான கூடைப்பந்து போட்டி கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெயலலிதா உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

    21 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் லயோலா கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப்போட்டியில் 79-67 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தை வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணிக்கு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி பரிசுகளை வழங்கினார். சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.30 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    லயோலா வீரர் சந்தோஷ் மணி தொடர் நாயகனாக தேர்வாகி ரூ.5 ஆயிரம் பெற்றார்.

    Next Story
    ×