search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே சீசனில் 79 வி்க்கெட்டுக்கள் கைப்பற்றி உலக சாதனைப் படைத்தார் அஸ்வின்
    X

    ஒரே சீசனில் 79 வி்க்கெட்டுக்கள் கைப்பற்றி உலக சாதனைப் படைத்தார் அஸ்வின்

    ஒரே சீசனில் 79 விக்கெட்டுக்கள் வீ்ழ்த்தி தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் சாதனையை முறியடித்து அஸ்வின் உலக சாதனைப் படைத்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

    அந்த அணியின் கேப்டன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 111 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஒரே சீசனில் 79 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஸ்வின் உலக சாதனைப் படைத்துள்ளார்.

    இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 2007-08 சீசனில் 78 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தார். தற்போது அஸ்வின் 79 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.



    புனே டெஸ்டில் 64-வது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்திய மண்ணில் ஒரே சீசனில் (1979-80) 63 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்திருந்த கபில்தேவின் சாதனையை அஸ்வின் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

    புனே மற்றும் பெங்களூருவில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய அஸ்வின், ராஞ்சி டெஸ்டில் இரண்டு விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்த முடிந்தது.
    Next Story
    ×