search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடரை வெல்லவது யார்? : இந்தியா- ஆஸ்திரேலியா நாளை கடைசி டெஸ்ட்
    X

    தொடரை வெல்லவது யார்? : இந்தியா- ஆஸ்திரேலியா நாளை கடைசி டெஸ்ட்

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது. இரு அணிகளும் சமபலம் பொருந்தி காணப்படுவதால் தொடரை வெல்வது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    தர்மசாலா:

    ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் புனேயில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை (25-ந்தேதி) தொடங்குகிறது.

    வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி கடும் சவாலாக இருக்கும் என்பதால் தொடரை கைப்பற்ற இந்தியா கடுமையாக போராட வேண்டும்.

    இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் தொடரை வெல்வது யார்? என்பதில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. போட்டி ‘டிரா’ வில் முடிந்தால் டெஸ்ட் தொடர் சமநிலையில் முடியும்.

    முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறும் தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இந்தியாவின் வேகப் பந்தைவிட ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சு வலுவானது என்பதால் இந்த டெஸ்ட் கடுமையானதாக இருக்கும்.

    இந்திய அணியில் இணைந்த வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவது சந்தேகம். அவர் உடற்நிபுணர் பேட்லக் பர்ஹாட்டின் கண்கணிப்பில் உள்ளார். இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் ஆடும் பட்சத்தில் கருண்நாயர் கழற்றி விடப்படலாம்.

    கேப்டன் வீராட்கோலி பேட்டிங்கில் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். மிகவும் முக்கியமான இந்த டெஸ்டில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். அவர் 5 இன்னிங்சில் வெறும் 46 ரன்களே எடுத்து உள்ளார்.


    தோள்பட்டை காயத்தால் கோலி அவதிப்பட்டு வருகிறார். இதனால் மும்பையை சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பேட்டிங்கில் புஜாரா, முரளிவிஜய், ராகுல் ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஜடேஜா 21 விக்கெட் வீழ்த்தி முன்னிலையில் இருக்கிறார். கடந்த டெஸ்டில் சிறப்பாக வீசாத அஸ்வினுக்கு நெருக்கடி இருக்கிறது.

    ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் சுமித், ரென்ஷா, ஷான்மார்ஷ், ஹேண்ட்ஸ் ஹோம் நல்ல நிலையில் உள்ளனர். ஹாசல்வுட், கும்மின்ஸ் பந்துவீச்சு தர்மசாலா டெஸ்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஓகீபேவுக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் பேர்டு இடம் பெறலாம்.

    இந்த டெஸ்டில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். முதலில் ஆடும் அணி ரன் குவிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×