search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரர்களுக்கு சலுகை: மற்ற விளையாட்டு துறையும் பி.சி.சி.ஐ.-யை பின்பற்ற வேண்டும்- ரவி சாஸ்திரி
    X

    வீரர்களுக்கு சலுகை: மற்ற விளையாட்டு துறையும் பி.சி.சி.ஐ.-யை பின்பற்ற வேண்டும்- ரவி சாஸ்திரி

    இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு அதிக அளவில் சலுகை வழங்குவதுபோல், மற்ற அமைப்புகளும் பி.சி.சி.ஐ.யை பின்பற்றி சலுகைகள் வழங்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வீரர்களுக்கான ஒப்பந்தத்தை வெளியிட்டது. அப்போது ‘ஏ’ கிரேடில் உள்ள வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாயில் இருந்து இரண்டு கோடி ரூபாயாக ஒப்பந்த தொகையை உயர்த்தியது. ‘பி’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ. 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாகவும், ‘சி’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாகவும் உயர்த்தியது.

    இதேபோல் மற்ற விளையாட்டுத் துறையிலும் வீரர்களுக்கு வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    இதுகுறித்து ரவிசாஸ்திரி கூறுகையில் ‘‘கிரிக்கெட்டில் இருந்த சில விஷயங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளவது, நீக்கிக்கொள்வது மிகவும் எளிதானது. வெளிநாட்டு வீரர்கள் பெறும் வசதிகளை, நம் நாட்டில் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வெல்ல வேண்டும் என்று பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் இளம் வீரர்கள் கேட்க வேண்டும்.

    கிரிக்கெட்டில், ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்களை விட இந்திய வீரர்கள் என்ன வசதி பெறுகிறார்கள் என்பது பற்றி நான் கவலைக் கொள்ளவில்லை. ஏனெனில் இந்திய வீரர்கள் 90 சதவீதத்திற்கு மேல் வசதி பெறுகிறார்கள். மற்ற நாட்டு வீரர்கள் 10 சதவீதம் வேண்டுமென்றால் அதிகமாக பெறலாம்.



    இந்திய நாட்டில் மற்ற விளையாட்டுத்துறைகளை எடுத்துக் கொண்டால், 10 சதவீதம்தான் இடைவெளி உள்ளதா?. 70 சதவீதம் இடைவெளி உள்ளது என்பது கட்டாயமாக கூறுவேன். ஆகவே, மற்ற விளையாட்டுத் துறைகளில் உள்ள வீரர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களை கண்கொத்தி பாம்பாக கவனித்து வந்தால், நீங்கள் நல்ல முடிவை அவர்களிடம் இருந்து காணலாம்’’ என்று கூறியுள்ளார்.

    மேலும் நான் 1990-ல் எனது கடைசி டெஸ்டில் 10 ஆயிரம் ரூபாய் வாங்கினேன். இரண்டு வருடங்கள் கழித்து அந்த தொகை 2.5 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×