search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: சென்னை விவா அணி வெற்றி
    X

    சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: சென்னை விவா அணி வெற்றி

    நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை விவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.
    சென்னை :

    சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை விவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. 5-வது லீக்கில் ஆடிய இந்தியன் வங்கி அணிக்கு இது முதல் தோல்வியாகும். விவா அணியில் பசந்த் ராய், மைக்கேல் லக்யூ கோல் அடித்தனர்.

    முதல் டிவிசன் லீக்கில் ஆரோஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் எஸ்.டி.எஸ். அணியை தோற்கடித்தது. லெவன் வாரியர்ஸ்- ரங்கூன் எப்.சி. இடையிலான ஆட்டம் கோல் எதுவும் இன்றி டிராவில் முடிந்தது. இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் சீனியர் டிவிசனில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன்- சென்னை எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.
    Next Story
    ×