search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நட்புறவு கால்பந்து: கம்போடியாவை வென்றது இந்தியா
    X

    நட்புறவு கால்பந்து: கம்போடியாவை வென்றது இந்தியா

    கம்போடியாவுடனான நட்புறவு கால்பந்து போட்டியில் இந்திய கால்பந்து அணி 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 6 ஆண்டுக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
    நாம் பென்:

    இந்தியா-கம்போடியா அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி கம்போடிய தலைநகரான நாம் பென் நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியின் துவக்கத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 36-வது நிமிடத்தில் சுனில் சேத்ரி கோல் அடித்து, கணக்கைத் துவக்கினார். இதற்கு அடுத்த நிமிடத்தில் பதிலடி கொடுத்தது கம்போடியா. அந்த அணியின் குவான் 37-வது நிமிடத்தில் கோல் அடித்ததால், 1-1 என சமன் ஆனது. அதன்பின்னர் முதல் பாதியில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் இந்தியா மேலும் இரண்டு கோல்கள் அடித்தது. கம்போடியா ஒரு கோல் அடித்தது. இதனால், 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

    இதன்மூலம், 2006ம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அணி அன்னிய மண்ணில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. கடைசியாக 2006-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த வெற்றியின் உற்சாகத்துடன் இந்திய அணி அடுத்து மார்ச் 28-ம் தேதி ஆசியக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் மியான்மரை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×