search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியில் 5-வது பந்து வீச்சாளர் இல்லாததால் வெற்றி பெற முடியவில்லை: கவாஸ்கர்
    X

    இந்திய அணியில் 5-வது பந்து வீச்சாளர் இல்லாததால் வெற்றி பெற முடியவில்லை: கவாஸ்கர்

    ராஞ்சி டெஸ்டில் இந்திய அணியில் 5-வது பிரதான பவுலர் இல்லாததே வெற்றி பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
    புதுடெல்லி :

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    6-வது வரிசையில் அஸ்வின், 7-வது வரிசையில் விருத்திமான் சஹா ஆகியோர் இறங்குவதன் மூலம் இந்தியாவின் பேட்டிங் வலுவடைகிறது. 8-வது வரிசையில் ரவீந்திர ஜடேஜாவும் ரன்கள் குவிக்கிறார். எனவே 6 பேட்ஸ்மேன்கள், 5 பவுலர்களுடன் களம் இறங்குவதே சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.



    ராஞ்சி டெஸ்டில் இந்திய அணியில் 5-வது பிரதான பவுலர் இல்லாததே வெற்றி பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். 5-வது பவுலர் எதிரணியை முழுமையாக சீர்குலைத்து விடுவார் என்று சொல்லமாட்டேன். ஆனால் அவரால் கடினமாக உழைக்கும் நமது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் ஓய்வு கொடுக்க முடியும்.

    ராஞ்சி டெஸ்டில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 451 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய இந்தியா அதை தாண்டி ரன்கள் குவித்தது. இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவை ஆல்-அவுட் ஆக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் உத்வேகம் நிச்சயம் இந்தியாவிடம் இருக்கிறது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
    Next Story
    ×