search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புஜாரா, சகாவின் அபார ஆட்டத்தால் தேனீர் இடைவேளை வரை இந்தியா 52 ரன்கள் முன்னிலை
    X

    புஜாரா, சகாவின் அபார ஆட்டத்தால் தேனீர் இடைவேளை வரை இந்தியா 52 ரன்கள் முன்னிலை

    ராஞ்சி டெஸ்டில் புஜாரா, சகா ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 52 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. சகா சதம் விளாசினார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவை விட 91 ரன்கள் பின்தங்கியிருந்தது. புஜாரா 130 ரன்னுடனும், சகா 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பலை போல் ஆடுகளத்துடன் ஒட்டிக் கொண்டனர். இந்த வி்க்கெட் பிரிக்க ஆஸ்திரேலியா எவ்வளவு முயற்சி செய்தும் பலனிக்கவில்லை. நான்கு ரிவியூ வாய்ப்பையும் பயன்படுத்தி வீணாக்கியது.



    4-வது நாள் மதிய உணவு இடைவேளை இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் சிறப்பாக விளையாடியது. அதன்பின்பும் தற்போது தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள். இந்தியா தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 190 ரன்னுடனும், சகா 99 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சகா ஒரு ரன் எடுத்து தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
    Next Story
    ×