search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெலிங்டன் டெஸ்ட் போட்டி: டி-காக், பவுமா ஆட்டத்தால் மீண்ட தென்ஆப்பிரிக்கா
    X

    வெலிங்டன் டெஸ்ட் போட்டி: டி-காக், பவுமா ஆட்டத்தால் மீண்ட தென்ஆப்பிரிக்கா

    வெலிங்டன் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் டி-காக், பவுமா ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா அணி சரிவில் இருந்து மீண்டது. அந்த அணி 84 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 316 ரன் எடுத்து இருந்தது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. நியூசிலாந்து முதல் இன்னிஸ்சில் 268 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    நிகோல்ஸ் சதம் அடித்தார். பின்னர் முதல் இன்னிஸ்சை விளையாடி தென் ஆப்பிரிக்கா ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 24 ரன் எடுத்து இருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ரபடா (9 ரன்), டுமிஸ் (16 ரன்), அம்லா (21 ரன்), டுபிளசிலிஸ் (22 ரன்) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அந்த அணி 94 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறியது. அதன்பின் டிகாக்-பவுமா ஜோடி சரிவில் இருந்து அணி மீட்டது. டிகாக் 91 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்தது.


    சிறது நேரத்தில் பவுமாவும் அவுட் ஆனார். அவர் 89 ரன் எடுத்தார். டி-காக், பவுமா ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா சரிவில் இருந்து மீண்டது. அந்த அணி 84 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 316 ரன் எடுத்து இருந்தது.

    Next Story
    ×