search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வினுக்கு பி.சி.சி.ஐ.-யின் திலிப் சர்தேசாய் விருது: பாலி உம்ரிகர் விருது பெறுகிறார் கோலி
    X

    அஸ்வினுக்கு பி.சி.சி.ஐ.-யின் திலிப் சர்தேசாய் விருது: பாலி உம்ரிகர் விருது பெறுகிறார் கோலி

    இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பி.சி.சி.ஐ.-யின் திலிப் சர்தேசாய் விருதும், கேப்டன் விராட் கோலிக்கு பாலி உம்ரிகர் விருதும் வழங்கப்படுகிறது.
    மும்பை:

    இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் பெறும் வீரர்களை, பி.சி.ஐ.சி. விருது கமிட்டி தேர்வு செய்து அறிவித்து வருகிறது.

    இதில், சீனியர் பிரிவில் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க விருதான பாலி உம்ரிகர் விருதினை கேப்டன் விராட் கோலி பெறுகிறார். இதன்மூலம் மூன்றாவது முறையாக இந்த விருதை அவர் பெறுகிறார். மூன்று முறை இவ்விருது பெறும் முதல் இந்திய வீரர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

    சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு திலிப் சர்தேசாய் விருது வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இவ்விருதை பெற உள்ளார்.

    முன்னதாக, ரஜீந்தர் கோயல், பத்மாகர் ஷிவால்கர் ஆகியோர் கர்னர் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பெண்கள் அணி கேப்டன சாந்தா ரங்கசாமி பி.சி.சி.ஐ. வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இதேபோல் உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    பி.சி.சி.ஐ. விருது வழங்கும் விழா பெங்களூரில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது.
    Next Story
    ×