search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 77-வது தரநிலை வீரரிடம் வீழ்ந்தார் வாவ்ரிங்கா
    X

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 77-வது தரநிலை வீரரிடம் வீழ்ந்தார் வாவ்ரிங்கா

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் 77-வது இடத்தில் உள்ள வீரரிடம் முன்னணி வீரர் வாவ்ரிங்கா நேர்செட் கணக்கில் சரணடைந்தார்.
    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் முன்னணி வீரரான வாவ்ரிங்கா, உலகத் தரவரிசையில் 77-வது இடத்தில் உள்ள டாமிர் தும்குரை எதிர்கொண்டார்.

    3-ம் தரநிலையில் இருக்கும் வாவ்ரிங்கா எளிதில் வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் செட்டில் டாமிர் 7-6 (4) வெற்றி பெற்றார்.




    முதல் செட்டில் சற்று நெருக்கடி கொடுத்த வாவ்ரிங்கா 2-வது செட்டில் எளிதில் சரணடைந்தார். வாவ்ரிங்கா 2-வது செட்டை 3-6 என இழந்தார். இதனால் முதல் சுற்றுடன் வாவ்ரிங்கா போட்டியி இருந்து வெளியேறினார். வாவ்ரிங்காதான் தற்போதைய சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல் செட்டில் வாவ்ரிங்கா 4-1 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் ஆட்டத்தில் கோட்டைவிட்டார்.
    Next Story
    ×