search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு ஆடுகளம் பேட்டிங், பந்து வீச்சுக்கு சரிசமமான வகையில் இருக்கும்: கர்நாடக கிரிக்கெட் வாரியம்
    X

    பெங்களூரு ஆடுகளம் பேட்டிங், பந்து வீச்சுக்கு சரிசமமான வகையில் இருக்கும்: கர்நாடக கிரிக்கெட் வாரியம்

    பெங்களூரு சின்னசாமி ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டு துறையிலும் சிறப்பாக செயல்படும் வகையில் இருக்கும் என ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. புனே ஆடுகளம் முதல் ஓவரில் இருந்தே பந்து டர்ன் ஆகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் போட்டி மூன்று நாட்களுக்கு முன்பே முடிவடைந்துவிட்டது. இதனால் புனே போன்ற ஆடுகளத்தை மற்ற மூன்று போட்டிகளுக்கும் அமைத்து விடக்கூடாது என விமர்சனம் எழுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 4-ந்தேதி தொடங்கும் பெங்களூரு சின்னசாமி டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் ஸ்போர்ட்டிங் ஆடுகளமாக (இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் வகையில்) இருக்கும் என பெங்களூர் மைதான ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

    மேலும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சுதாகர் ராவ் கூறுகையில் ‘‘ஆடுகளத்தை அப்படி அமைக்க வேண்டும், இப்படி அமைக்க வேண்டும் என்று இந்திய அணியிடம் இருந்து எந்தவொரு பரிந்துரையும் எங்களுக்கு வரவில்லை. நாங்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரிசமமாக போட்டியிருக்கும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

    எங்களுடைய நோக்கம் ஸ்போர்ட்டிங், டெஸ்ட் மேட்ச் ஆடுகளம் அமைக்க வேண்டும் என்பதுதான். நாங்கள் ஐந்து நாட்கள் போட்டியை விரும்புகிறோம். இரண்டரை நாட்களில் போட்டி முடிவடைவதை நாங்கள் முற்றிலும் விரும்பவில்லை. ஆடுகளத்தின் அடியில் சற்று ஈரப்பதம் இருக்க விரும்புகிறோம். அதனால் தண்ணீர் ஊற்றுவதை நாங்கள் நிறுத்தவில்லை. போட்டி தொடங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்பு வரை தண்ணீர் தெளிப்போம். அதன்பின் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு, அதற்கேற்றபடி முடிவு எடுப்போம்’’ என்றார்.
    Next Story
    ×