search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ரஜிந்தர் கோயல், பத்மாகர் ஷிவால்கர் பெயர் பரிந்துரை
    X

    வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ரஜிந்தர் கோயல், பத்மாகர் ஷிவால்கர் பெயர் பரிந்துரை

    பி.சி.சி.ஐ.யின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்தியாவின் முன்னாள் உள்ளூர் வீரர்களான ரஜிந்தர் கோயல், பத்மாகர் ஷிவால்கர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி 2016-ம் ஆண்டுக்கான விருதை பெறுவர்களின் பெயரை பரிந்துரைக்க என். ராம், ராமச்சந்திரா குகா மற்றும் டயனா எடுல்ஜி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழு இன்று வாழ்நாள் சாதனையாளர் விருதுகளுக்கான பெயரை பரிந்துரை செய்துள்ளது. அதில் ரஜிந்தர் கோயல், பத்மாகர் ஷிவால்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், வாமன் விஸ்வனாத் குமார், மறைந்த ராமாகந்த் தேசாய் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ-யின் சிறந்த விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி பெயர் பெண்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் பரிந்துரை பட்டியலில் உள்ளது. இவர் இந்திய அணிக்காக 12 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    ரஜிந்தர் கோயல் 750 முதல் தர வி்க்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதில் 637 விக்கெட்டுக்கள் ரஞ்சி டிராபியில் பெற்றதாகும். எந்தவொரு பந்து வீச்சாளரும் இவ்வளவு விக்கெட்டுக்கள் வீழ்த்தியது கிடையாது. ஷிவால்கர் 124 போட்டிகளில் 589 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×