search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி: சென்னை அணி சாம்பியன்
    X

    மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி: சென்னை அணி சாம்பியன்

    மாநில ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக் போட்டி சேலத்தில் கடந்த 2 தினங்களாக நடந்தது. இதில் சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
    மாநில ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக் போட்டி சேலத்தில் கடந்த 2 தினங்களாக நடந்தது. 4,5,6,8 மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பிரிவில் நடந்த இந்தப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 195 பேர் பங்கேற்றனர்.

    இதில் சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. சேலம் 2-வது இடத்தையும், மதுரை 3-வது இடத்தையும் பிடித்தன. சிறுவர்கள் பிரிவில் விஷ்வீஸ் ரிஷிகுமார், கவின்பாண்டியன், சாய்பிரசாந்த், ஸ்ரீஹரி, ஹர்சித் ஆகியோரும் சிறுமிகள் பிரிவில் அபினயா, சவர்னராணி, கீர்த்தனா, தீக்ஷிகா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

    தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் சங்க தலைவர் பி.பிரபு, சேலம் மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். இந்தப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஐதராபாத்தில் ஜூலை மாதம் நடைபெறும் தென்இந்திய போட்டிக்கு தமிழக அணி சார்பில் பங்கேற்பார்கள்.

    Next Story
    ×