search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    12 அணிகள் பங்கேற்கும் சீனியர் டிவிசன் கால்பந்து லீக்
    X

    12 அணிகள் பங்கேற்கும் சீனியர் டிவிசன் கால்பந்து லீக்

    சென்னை கால்பந்து சங்கம் சார்பில் செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்கள் ஆதரவுடன் சீனியர் டிவிசன் கால்பந்து ‘லீக்’ போட்டி இன்று தொடங்குகிறது.
    சென்னை:

    சென்னை கால்பந்து சங்கம் சார்பில் செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்கள் ஆதரவுடன் சீனியர் டிவிசன் கால்பந்து ‘லீக்’ போட்டி ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 9-வது செயின்ட் ஜோசப்ஸ்- சி.எப்.ஏ. சீனியர் டிவிசன் கால்பந்து ‘லீக்’ போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று (27-ந்தேதி) தொடங்குகிறது. மார்ச் 24-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.

    இதில் ஏ.ஜி.ஒ.ஆர்.சி, சென்னை சிட்டி கால்பந்து கிளப், சுங்க இலாகா, சென்னை எப்.சி, இந்துஸ்தான் ஈகிள்ஸ், சென்னை யுனைடட், ஐ.சி.எப். வருமானவரி, இந்தியன் வங்கி, மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன், விவா சென்னை, தெற்கு ரெயில்வே ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

    சென்னை யுனைடட், வருமானவரி ஆகிய இரண்டு அணிகள் முதல் டிவிசனில் இருந்து சீனியர் டிவிசனுக்கு முன்னேறி உள்ளார்.

    சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். 2-வது இடத்துக்கு ரூ.1 லட்சமும், 3-வது, 4-வது இடங்களுக்கு தலா ரூ.75 ஆயிரமும் வழங்கப்படும். ஆட்டநாயகன் விருதுக்கு ரூ.100 வழங்கப்படும்.மாலை 3 மணிக்கு மற்றும் 5 மணிக்கு 2 ஆட்டம் நடக்கிறது.

    இதேபோல முதல் டிவிசன் ‘லீக்’ போட்டியும் இதே தேதியில் நடக்கிறது. இதிலும் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிகள் காலை 6.30 மற்றும் 8.30 மணிக்கு நடக்கிறது.

    சீனியர் டிவிசன் கால்பந்து ‘லீக்’ போட்டியின் தொடக்க விழா இன்று மாலை நடக்கிறது.

    செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிறுவனங்களின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.பாபுமனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். சென்னை கால்பந்து சங்க செயலாளர் இ.சுகுமாறன் உள்பட நிர்வாகிகள் தொடக்க விழாவில் பங்கேற்கின்றன.

    இன்றைய தொடக்க ஆட்டங்களில் சென்னை யுனைடட்- தெற்கு ரெயில்வே, வருமானவரி- இந்தியன் வங்கி அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×