search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூர் டெஸ்டில் ஜெயந்த் யாதவ், இசாந்த் சர்மா நீக்கப்படலாம்: அசாருதீன் சொல்கிறார்
    X

    பெங்களூர் டெஸ்டில் ஜெயந்த் யாதவ், இசாந்த் சர்மா நீக்கப்படலாம்: அசாருதீன் சொல்கிறார்

    பெங்களூரில் நடைபெற இருக்கும் 2-வது டெஸ்டில் ஜெயந்த் யாதவ், இசாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்படலாம் என்று அசாருதீன் கூறியுள்ளார்.
    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான புனே ஆடுகளத்தில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பேட்டிங் குறைபாடே தோல்விக்கு முக்கிய காரணமாகிவிட்டது. 2-வது போட்டி மார்ச் மாதம் 4-ந்தேதி பெங்களூரில் தொடங்குகிறது. புனே ஆடுகளம் போன்று பெங்களூர் ஆடுகளம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

    2-வது டெஸ்டில் ஜெயந்த் யாதவ், இசாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்படலாம் என்று அசாருதீன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    பெங்களூர் டெஸ்ட் குறித்து அசாருதீன் கூறுகையில் ‘‘பேட்டிங் குறைபாடு அணியை பின்னுக்குத் தள்ளிவிடும். தொடரை இழந்து விட்டோம் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், இதேபோன்ற ஆடுகளத்தில் விளையாட விரும்புகிறீர்களா? என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.



    பெங்களூர் சின்னசாமி ஆடுகளம் இதுபோன்று இருக்காது என்பது எனது கணிப்பு. ஆகவே, என்னுடைய உறுதியான கணிப்பு என்னவெனில், ஜெயந்த் யாதவ், இசாந்த் சர்மா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்படலாம்.

    இந்திய அணியின் பேட்டிங் திறமையை வைத்து பார்க்கும்போது, இந்திய அணியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கருண் நாயர் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கிறேன். ஜெயந்த் யாதவிற்குப் பதிலாக அவர் சேர்ப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.



    மேலும், இசாந்த் சர்மாவின் வேகப்பந்த இதுபோன்ற ஆடுகளத்திற்கு உதவாது. ஆகவே, ஸ்விங் பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படலாம்’’ என்றார்.
    Next Story
    ×