search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ அதிரடி உத்தரவு
    X

    மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ அதிரடி உத்தரவு

    லோதா கமிட்டி பரிந்துரையை ஏற்று உறுதிபத்திரம் அளிக்க வேண்டும் என மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ அதிரடி உத்தரவிட்டுள்ளது.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து லோதா கமிட்டி பல பரிந்துரைகளை சிபாரிசு செய்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் சில பரிந்துரைகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்காததால் கிரிக்கெட் வாரியம் அமல்படுத்த கால தாமதம் செய்தது. இதனால் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் செயலாளர் பதவியில் இருந்து அனுராக் தாகூர், அஜய் ஷிர்கேயை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக நீக்கியது.

    கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க வினோத்ராய், ராமச்சந்திர குஹா, டயானா எடுலஜி, விக்ரம் லிமயே ஆகிய 4 பேர் கொண்ட குழுவை நியமித்தது. இந்த புதிய கமிட்டி குழு கிரிக்கெட் வாரிய நிர்வாகம், கணக்குகள், நிதி மற்றும் பல்வேறு வி‌ஷயங்களை நிர்வகித்து வருகிறது.

    இந்த நிலையில் கிரிக்கெட் வாரிய நிர்வாக புதிய கமிட்டி குழு அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

    அதில், லோதா கமிட்டி பரிந்துரைகளை செய்து சிபாரிசுகளை ஏற்பதாக உறுதி பத்திரத்தை மார்ச் 1-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் சிபாரிசு ஏற்க மறுக்கும் சில மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
    Next Story
    ×