search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 கோடி ரூபாய்க்கு ஏலம்: ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது: ஆப்கன் வீரர் சொல்கிறார்
    X

    4 கோடி ரூபாய்க்கு ஏலம்: ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது: ஆப்கன் வீரர் சொல்கிறார்

    ஐ.பி.எல். தொடரில் என்னை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது மிகவும் ஆச்சரியமாகவும், சந்தோஷமாக இருக்கிறது என ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கூறியுள்ளார்.
    ஐ.பி.எல். சீசன் 2017-க்கான ஏலம் இன்று நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த 18 வயதே ஆன சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே ரஷித்தை ஏலம் எடுக்க போட்டி நிலவியது.

    ஐ.பி.எல். ஏலத்தில் தான் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது குறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘ஐ.பி.எல். ஏலத்தை டி.வி.யில் பார்க்க எனது போற்றோர்கள் முன்னதாக எழுந்து விட்டார்கள். அவர்கள் எனக்கு போன் செய்யும்போது நான் தூங்கி்க் கொண்டிருந்தேன். உடனே எழுந்து டி.வி.யை பார். ஏலத்தில் நீ தோன்றுகிறார் என்றார்கள். ஜிம்பாப்வேயில் இருக்கும் நான் ஏலத்தை பார்த்தேன். நான் ஏலத்தில் எடுக்கப்பட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதேவேளையில் மிகவும் சந்தோஷசமாகவும் இருந்தது. இந்த சம்பவத்தை நான் நம்பவே இல்லை. மிகவும் விரைவில் நடந்து விட்டது.

    ஆப்கானிஸ்தான் வீரர்களுடைய நோக்கமே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதுதான். அதற்கான நாங்கள் கடினமாக முயற்சி செய்து விளையாடி வருகிறோம். டெஸ்ட் போட்டியில் விளையாடும் அனுமதியை பெற்றுவிட்டோம் என்றால், எங்களுடைய சந்தோஷத்தை விவரிக்க இயலாது’’ என்றார்.
    Next Story
    ×