search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா: மெஸ்சியின் கடைசி நிமிட பெனால்டி கோலால் பார்சிலோனா வெற்றி
    X

    லா லிகா: மெஸ்சியின் கடைசி நிமிட பெனால்டி கோலால் பார்சிலோனா வெற்றி

    லா லிகா கால்பந்து தொடரில் மெஸ்சியின் கடைசி நிமிட பெனால்டி கோலால் பார்சிலோனா அணி லேகன்ஸ் அணியை 2-1 என வீழ்த்தியது.
    கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனாவை பாரிஸ் ஜெயன்ட்ஸ்-ஜெர்மைன் அணி 0-4 என தோற்கடித்தது. இந்த தோல்வியுடன் நேற்று லேகன்ஸ் அணியை சந்தித்தது.

    ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் பாதிநேரம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் 2-வது பாதிநேரம் ஆட்டம் தொடங்கியது. 71-வது நிமிடத்தில் லேகன்ஸ் அணியின் லோபஸ் பதில் கோல் அடித்தார். இதனால் 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்தது.



    லா லிகா சாம்பியன் தொடரில் ரியல் மாட்ரிட் உடன் முதல் இடத்திற்கு போட்டியிட்டு வரும் பார்சிலோனா இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் போட்டியில் நீடிக்க முடியும் என்பதால் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் ஆக்ரோஷமாக விளையாடியது. இருந்தாலும் பார்சிலோனா அணியால் கோல் அடிக்க இயலவில்லை.



    ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் அதாவது கடைசி நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை மெஸ்சி சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகள் பெற்று லா லிகா புள்ளிகள் பட்டியலில், 23 போட்டிகள் முடிவில் 51 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் 21 போட்டிகள் முடிவில் 52 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
    Next Story
    ×