search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளையோர் கிரிக்கெட்: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் டிரா
    X

    இளையோர் கிரிக்கெட்: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் டிரா

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் டிராவில் முடிந்தது.
    நாக்பூர்:

    19 வயதுக்கு உட்பட்ட (இளையோர்) இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 501 ரன்களும், இந்தியா 431 ரன்களும் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதையடுத்து 70 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்து இருந்தது.

    இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 53 ஓவர்களில் 167 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் சிஜோமான் ஜோசப் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் 238 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ஆட்ட நேரம் முடிவில் 49 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் 92 ரன்கள் (நாட்-அவுட்) விளாசினார். இவ்விரு இளையோர் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் 21-ந் தேதி தொடங்குகிறது. 
    Next Story
    ×