search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது
    X

    நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது

    நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ‘சேப்பல் - ஹாட்லி’ ஒருநாள் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி பரபரப்பான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது போட்டி இன்று பகல் இரவு ஆட்டமாக நேப்பியரில் நடைபெறுவதாக இருந்தது. போட்டி நடக்கும் நேப்பியரில் இன்று காலை பலத்த மழை பெய்தது. இதனால் மைதானத்தில் மழை நீர் தேங்கியது. ஆகவே உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் தள்ளிப்போனது.

    பின்னர் மைதான ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். ஊழியர்களின் தீவிர முயற்சியால் மழை நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. போட்டி நடுவர்கள் 6.45 மணிக்கு மைதானத்தை பார்வையிட்டனர். அப்போது பவுண்டரி லைன் அருகே மைதானம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் பீல்டிங் செய்யும் வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என கூறிய நடுவர்கள், போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர்.

    3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 5-ந்தேதி நடக்கிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடர் சமநிலையடையும்.
    Next Story
    ×