search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரானி கோப்பை கிரிக்கெட்: 359 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் குஜராத்
    X

    இரானி கோப்பை கிரிக்கெட்: 359 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் குஜராத்

    இரானி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட்டில் குஜராத் அணி 359 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
    இரானி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட்டில் குஜராத் - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த குஜராத் அணி சிராக் காந்தியின் (169) சதத்தால் முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்தது. ரெஸ்ட் ஆப் இந்தியாவின் சித்தார்த் கவுல் ஐந்து விக்கெட்டும், பங்கஜ் சிங் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னி்ங்சில் 226 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. புஜாரா அதிகபட்சமாக 86 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணி சார்பில் கஜா அதிபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    132 ரன்கள் முன்னிலையுடன் குஜராத் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பன்சாலைத் தவிர மற்ற வீர்ரகள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். பன்சால் 73 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்சில் குஜராத் அணியை மீட்ட காந்திதான் 2-வது இன்னிங்சிலும் குஜராத் அணியை மீட்டெடுத்துள்ளார். அவர் 55 ரன்கள் எடுத்து 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை அவுட்டாகாமல் இருக்க குஜராத் அணி 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.

    தற்போது வரை குஜராத் அணி 359 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கைவசம் இன்னும் 2 விக்கெட்டுக்கள் உள்ளன. கூடுதலாக 41 ரன்கள் எடுத்து 400 ரன்களுக்கு மேல் ரெஸ்ட் ஆப் இந்தியாவிற்கு இலக்கு நிர்ணயித்தால் குஜராத் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×