search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து 32 ஓவரில் 185/2
    X

    3-வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து 32 ஓவரில் 185/2

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 32 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தவான் நீக்கப்பட்டு ரகானே சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ், ஜோ ரூட் நீக்கப்பட்டு பில்லிங்ஸ், பேர்ஸ்டோவ் சேர்க்கப்பட்டனர்.

    தொடக்க வீரர்களாக ராய் மற்றும் பில்லிங்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். இங்கிலாந்து அணி 17.2 ஓவரில் 98 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பில்லிங்ஸ் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து பேர்ஸ்டோவ் களம் இறங்கினார். ராய் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த இரு விக்கெட்டுக்களையும் ஜடேஜா வீழ்த்தினார்.

    3-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து அணி 32 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 39 ரன்னுடனும், மோர்கன் 36 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×