search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: வீனஸ், அனஸ்டசியா காலிறுதிக்கு தகுதி
    X

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: வீனஸ், அனஸ்டசியா காலிறுதிக்கு தகுதி

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ், அனஸ்டசியா காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் 13-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியை சேர்ந்த மோனா பார்தலை எதிர் கொண்டார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 4-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    8-ம் நிலை வீராங்கனையான சுவெட்லனா குஸ்னெட் சோவா (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    24-ம் நிலை வீராங்கனையான அனஸ்டசியா 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் குஸ்னெட் சோவாவை வீழ்த்தினார். அவர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    வீனஸ் வில்லியம்ஸ் - அனஸ்டசியா காலிறுதியில் மோதுகிறார்கள்.
    Next Story
    ×