search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரானி கோப்பை: ரெஸ்ட் ஆப் இந்தியா 206-க்குள் 9 விக்கெட்டை இழந்து திணறல்
    X

    இரானி கோப்பை: ரெஸ்ட் ஆப் இந்தியா 206-க்குள் 9 விக்கெட்டை இழந்து திணறல்

    இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் குஜராத்திற்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
    குஜராத் - ரெஸ்ட் ஆப் இந்தியா இடையிலான இரானி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் மும்பையில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் சிராக் காந்தி சதம் (169) அடிக்க குஜராத் அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்தது. ரெஸ்ட் ஆப் இந்தியாவின் கவுல் 5 விக்கெட்டும், பங்கஜ் சிங் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ஹெர்வாத்கர் 48 ரன்களும், அபிநவ் முகுந்த் 8 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த கேப்டன் புஜாரா 86 ரன்கள் சேர்த்தார். ஆனால், அதன்பின் வந்த கருண் நாயர் (28), மனோஜ் திவாரி (12), சகா (0), குல்தீப் யாதவ் (5), நதீம் (0) அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் 2-வது நாள் ஆட்ட முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது.

    தற்போது வரை ரெஸ்ட் ஆப் இந்தியா 152 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 1 விக்கெட்டுக்கள் மட்டுமே மீதமுள்ளது. இதனால் குஜராத் தற்போதைய நிலையில் முன்னிலையில் உள்ளது. 2-வது இன்னிங்சில் குஜராத்தை அணியை குறைந்த ரன்னில் மட்டுமே சுருட்டினால் மட்டுமே ரெஸ்ட் ஆப் இந்தியாவிற்கு சாதகமாக அமையலாம்.
    Next Story
    ×