search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன்: 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் 4-வது சுற்றுக்கு முன்னேறிய நடால்
    X

    ஆஸ்திரேலிய ஓபன்: 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் 4-வது சுற்றுக்கு முன்னேறிய நடால்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 4 மணி நேரம் போராடி வெற்றி பெற்று ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    2017-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் சில நாட்களுக்கு முன் மெல்போர்ன் நகரில் தொடங்கியது.

    இன்று ஆண்களுக்கான 3-வது சுற்றில் முன்னணி வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், ஜெர்மனி நாட்டின் இளம் வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் நடால் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், அலெக்சாண்டர் கடும் நெருக்கடி கொடுத்தார். முதல் செட்டை அலெக்சாண்டர் 4-6 எனக் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டை நடால் 6-3 எனக் கைப்பற்றினார். 3-வது செட்டில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்த செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் அலெக்சாண்டர் 6-7(5) அந்த செட்டில் வெற்றி பெற்றார். மூன்று செட்டுகள் முடிவில் 2-1 என அலெக்சாண்டர் முன்னிலைப் பெற்றிருந்தார்.

    அடுத்த இரண்டு செட்டில் ஏதாவது ஒன்றை கைப்பற்றினால் நடாலை தோற்கடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் அலெக்சாண்டர் 4-வது செட்டை எதிர்கொண்டார். ஆனால், அனுபவம் வாய்ந்த நடால் திறமையாக விளையாடி 6-3 எனக் கைப்பற்றினார். அத்துடன் கடைசி செட்டையும் 6-2 எனக் கைப்பற்றினார். ஐந்து செட்டுகள் வரை நீடித்த இப்போட்டியில் நடால் 4 மணி நேரம் போராடி வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    Next Story
    ×