search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முர்ரே, வீனஸ் வில்லியம்சும் வெற்றி
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முர்ரே, வீனஸ் வில்லியம்சும் வெற்றி

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முர்ரே, வீனஸ் வில்லியம்சும் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    மெல்போர்ன் :

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் சாம் குயரியுடன் மோதினார்.

    தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆன்டி முர்ரே 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நடப்பு சாம்பியன் ஜோகோவிச் 2-வது சுற்றிலேயே மண்ணை கவ்வி விட்டதால் இந்த முறை தனது ஆஸ்திரேலிய ஓபன் கனவை நனவாக்க முர்ரேவுக்கு பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. முர்ரே, 5 முறை ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முர்ரே 4-வது சுற்றில் ஜெர்மனியின் மிஸ்ச்சா ஸ்வெரேவுடன் மோதுகிறார்.

    முன்னாள் சாம்பியன் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 3-6, 6-2, 6-2, 7-6 (7) என்ற செட் கணக்கில் விக்டோர் டிரோக்கியையும் (செர்பியா), பிரான்சின் சோங்கா 7-6 (4), 7-5, 6-7 (8), 6-3 என்ற செட் கணக்கில் ஜாக் சோக்கையும் (அமெரிக்கா), ஜப்பானின் நிஷிகோரி 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் லுகாஸ் லாக்கோவையும் (சுலோவக்கியா) வீழ்த்தினர். இதே போல் இங்கிலாந்தின் டேனியல் இவான்ஸ் 7-5, 7-6 (7-2), 7-6 (7-3) என்ற நேர் செட்டில் உள்ளூர் நாயகன் பெர்னர்ட் தாமிக்குக்கு அதிர்ச்சி அளித்து, கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் தாமஸ்பெர்டிச்சை வீழ்த்தி 4-வது சுற்றை உறுதி செய்தார். ஆஸ்திரேலிய ஓபனில் பெடரர் 4-வது சுற்றை எட்டுவது இது 15-வது முறையாகும்.

    Next Story
    ×