search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் காரணமாக பாகிஸ்தான், நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து கிறிஸ் லைன் நீக்கம்
    X

    காயம் காரணமாக பாகிஸ்தான், நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து கிறிஸ் லைன் நீக்கம்

    ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் லைன் கழுத்துக் காயம் காரணமாக பாகிஸ்தான் தொடரில் இருந்தும், நியூசிலாந்து தொடரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் போட்டியில் 26 வயதான கிறிஸ் லைன் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானார். அந்த போட்டியில் அவர் 16 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அதன்பின் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது எஞ்சிய 3-வது போட்டியில் இருந்தும், அதன்பின் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

    ஆனால் இலங்கைக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 கிரிக்கெட் தொடருக்குள் காயத்தில் இருந்து மீண்டு விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக நாளை நடைபெற இருக்கும் 3-வது ஒருநாள் போட்டியில் ஹேண்ட்ஸ்காம்ப் களம் இறங்க உள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. கவாஜா, 3. ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), 4. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 5. டிரேவிஸ் ஹெட், 6. கிளென் மேக்ஸ்வெல், 7. மேத்யூ வடே (விக்கெட் கீப்பர்), 8. ஜேம்ஸ் பால்க்னெர், 9. கம்மின்ஸ், 10. ஹசில்வுட். 11. பில்லி ஸ்டான்லேக்.
    Next Story
    ×