search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்துக்கு அதிர்ச்சி: வில்லியம்சன் சதத்தால் நியூசிலாந்து வெற்றி
    X

    வங்காளதேசத்துக்கு அதிர்ச்சி: வில்லியம்சன் சதத்தால் நியூசிலாந்து வெற்றி

    வங்காள தேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் சதத்தால் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    நியூசிலாந்து - வங்காள தேசம் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 595 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 539 ரன் குவித்தது.

    56 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் நேற்றைய 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 66 ரன் எடுத்து இருந்தது.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 160 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்துக்கு 217 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வில்லியம்சனின் சதத்தால் நியூசிலாந்து வெற்றி பெற்றது. அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 90 பந்தில் 104 ரன்னும் (15 பவுண்டரி), டெய்லர் 60 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்தின் இந்த வெற்றி எதிர்பாராத ஒன்றாகும். வங்காளதேசம் 595 ரன் குவித்தும் தோற்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளது.
    Next Story
    ×