search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 வருடத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய யுவராஜ் சிங்
    X

    3 வருடத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய யுவராஜ் சிங்

    புனேயில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் யுவராஜ் சிங் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் 3 வருடத்திற்குப் பிறகு ஒருநாள் அணியில் அவர் விளையாடுகிறார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று புனேயில் தொடங்கியது. ஆடும் இந்திய லெவன் அணியில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவியது. தொடக்க வீரர்களாக களம் இறங்க தவான், லோகேஷ் ராகுல் மற்றும் ரகானே ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் தவான், லோகேஷ் ராகுல் இடம்பிடித்துள்ளனர்.

    இதேபோல் மிடில் ஆர்டர் வரிசையில் யாருக்கெல்லாம் இடம்கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இறுதியில் கேதர் ஜாதவ், யுவராஜ் சிங், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பிடித்தனர். மணிஷ் பாண்டேவிற்கு இடம்கிடைக்காமல் போனது. யுவராஜ் ஆடும் லெவனில் இடம்பிடித்ததன் மூலம் 3 வருடத்திற்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் விளையாடுகிறார்.

    இதற்கு முன் கடைசியாக 2013-ம் ஆண்டு செஞ்சூரியனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இடம்பிடித்திருந்தார். அந்த போட்டி மழையினால் கைவிடப்பட்டது.

    ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம்:-

    1. தவான், 2. லோகேஷ் ராகுல், 3. விராட் கோலி, 4. டோனி, 5. யுவராஜ் சிங், 6. கேதர் ஜாதவ், 7. ஹர்திக் பாண்டியா, 8. ஜடேஜா, 9. அஸ்வின், 10. பும்ப்ரா, 11. உமேஷ் யாதவ்.
    Next Story
    ×