search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி ஆட்டம்: 305 ரன்கள் இலக்கை எட்டி இங்கிலாந்து லெவன் வெற்றி
    X

    பயிற்சி ஆட்டம்: 305 ரன்கள் இலக்கை எட்டி இங்கிலாந்து லெவன் வெற்றி

    இந்தியா ஏ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து லெவன் அணி 305 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
    இந்தியா  ஏ - இங்கிலாந்து லெவன் அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் பயிற்சி ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லெவன் அணி களம் இறங்கியது.

    அந்த அணி 48.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர் ராய் 62 ரன்னும், 3-வது நபராக களம் இறங்கிய பில்லிங்ஸ் 93 ரன்னும் குவித்தனர். இந்திய அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தியும் பயனில்லாமல் போனது.
    Next Story
    ×