search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீண்ட நாள் இடைவெளிக்கு பின் பயிற்சியின்றி களமிறங்க இருக்கும் டோனி
    X

    நீண்ட நாள் இடைவெளிக்கு பின் பயிற்சியின்றி களமிறங்க இருக்கும் டோனி

    இரண்டு மாத இடைவெளியைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஒருநாள் போட்டியில் டோனி பயிற்சியின்றி களமிறங்கலாம் என கூறப்படுகிறது.
    ஜார்க்கண்ட்:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி அக்டோபர் 29ஆம் தேதி விசாகபட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடினார். இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்நிலையில் கிட்டத்தட்ட இரண்டரை மாத இடைவெளி கழித்து தனது முதல் ஒருநாள் போட்டியில் டோனி களமிறங்க இருக்கிறார்.

    ஜனவரி 15 ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி புனேவில் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கியதைத் தொடர்ந்து அவர் களமிறங்க இருக்கும் முதல் ஒரு நாள் போட்டியாக இது அமைகிறது.

    தேசிய அளவிலான போட்டிகளில் தேர்வாக, காயமடைந்த வீரர்கள் ஒரு முதல்-தர போட்டியிலாவது விளையாட வேண்டும் என்ற நெறிமுறை இருக்கிறது, என்றாலும் ஏற்கனவே ஓய்வை அறிவித்த டோனிக்கு இது பொருந்தாது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2015 இல் நடைபெற்ற போட்டிகளுக்கு முன் ஜார்க்கண்ட் மாநிலத்திற்காக விஜய் ஹசாரே போட்டியில் அவர் கலந்து கொண்டார்.

    அடுத்த ஹசாரே போட்டிகள் பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகளிடையே ஒரு நாள் போட்டிகள் நிறைவுற்று நான்கு வாரங்கள் கழித்தே ஹசாரே கோப்பைக்கான போட்டிகள் துவங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளுக்கான பல்வேறு முக்கிய வீரர்கள் தங்களது அணிகளுக்காக களமிறங்க இருக்கும் நிலையில் டோனி, இது குறித்த தனது முடிவினை இதுவரை அறிவிக்காமலே இருக்கிறார்.
    Next Story
    ×