search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்சிலோனா - ரியல் மாட்ரிட் நாளை பலப்பரீட்சை: மெஸ்சி அசத்துவாரா?
    X

    பார்சிலோனா - ரியல் மாட்ரிட் நாளை பலப்பரீட்சை: மெஸ்சி அசத்துவாரா?

    ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக கடைசி ஐந்து போட்டிகளில் மெஸ்சி கோல் அடிக்கவில்லை. நாளைய போட்டியிலாவது கோல் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
    ஸ்பெயினில் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் மிகப்பெரிய தொடர் லா லிகா. இந்த லா லிகா சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பதில் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவும். கடந்த இரண்டு முறை தொடர்ந்து பார்சிலோனா அணியே லா லிகா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடந்த வருடம் பார்சிலோனா ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில்தான் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது.

    இந்த சீசனுக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய நேரப்படி நாளை இரவு 8.30 மணிக்கு இந்த இரண்டு அணிகளும் பார்சிலோனாவிற்கு சொந்தமான கேம்ப் நவ் மைதானத்தில் மோதுகின்றன. சுமார் 90 ஆயிரம் ரசிகர்கள் இந்த மைதானத்தில் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.

    பார்சிலோனா அணி தற்போது ரியல் மாட்ரிட் அணியை விட 6 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் உள்ளது. சொந்த மைதானத்தில் நாளை வெற்றி பெற அந்த அணி முனைப்பாக செயல்படும்.

    பார்சிலோனா அணியில் தலைசிறந்த வீரரான மெஸ்சி விளையாடி வருகிறார். இவர் மற்ற அணிகளுக்கு எதிராக கோல் மழையாக பொழிந்து வரும் நிலையில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக மட்டும் கோல் அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

    ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக கடைசி ஐந்து போட்டிகளில் ஒரு கோல் கூட அடித்ததில்லை. இந்த கோல் அடிக்காத வறட்சியை வரும் போட்டியில் நிவர்த்தி செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

    கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்ததால் பார்சிலோனா அணி 4-3 என ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.
    Next Story
    ×