search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய டென்னிஸ் சங்கத்தின் இடைக்கால தலைவராக பிரவீன் மகாஜன் நியமனம்
    X

    இந்திய டென்னிஸ் சங்கத்தின் இடைக்கால தலைவராக பிரவீன் மகாஜன் நியமனம்

    இந்திய டென்னிஸ் சங்கத்தின் இடைக்கால தலைவராக 62 வயதான பிரவீன் மகாஜன் என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி :

    அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் பொதுச் செயலாளராக தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்த அனில் கண்ணா, அதன் பிறகு 2012-ம் ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு வரை அந்த பதவியில் நீடித்தார். மேலும் 4 ஆண்டுகள் தலைவர் பதவியில் தொடரவும் திட்டமிட்டார். இதற்கிடையே, மத்திய அரசின் புதிய விளையாட்டு கொள்கையின் படி, விளையாட்டு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்தால், அடுத்த 4 ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும். அதன் அடிப்படையில் பதவியை விட்டு விலகும்படி அனில் கண்ணாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் நெருக்கடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து அனில் கண்ணா பதவியில் இருந்து ஒதுங்கினார்.

    இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிர்வாக குழு கூட்டத்தில், இந்திய டென்னிஸ் சங்கத்தின் இடைக்கால தலைவராக பிரவீன் மகாஜன் என்ற பெண் நியமனம் செய்யப்பட்டார். 62 வயதான பிரவீன், முன்னாள் மத்திய வருவாய் துறை உயர் அதிகாரி ஆவார். மத்திய சுங்க மற்றும் கலால்வரி துறையின் தலைவராக இருந்திருக்கிறார். ஜோத்பூரில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உறுப்பினராகவும் தற்போது இருக்கிறார். இந்திய டென்னிஸ் சங்கத்தின் தலைவராக ஒரு பெண் செயல்பட இருப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 1955-ம் ஆண்டு முதல் 1959-ம் ஆண்டு வரை ராஜ்குமாரி, தலைவர் பதவியை அலங்கரித்து இருக்கிறார்.

    அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி டென்னிஸ் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் 2020-ம் ஆண்டு வரை பதவியில் தொடரும் வகையில் புதிய தலைவர் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.
    Next Story
    ×